search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழக பாஜக தலைவர்"

    தமிழக பாரதிய ஜனதாவுக்கு தலைமை ஏற்க வாய்ப்பு கிடைத்தால் அதை தான் ஏற்க தயார் என்று எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார். #BJP #SVeShekher
    சென்னை:

    நடிகர் எஸ்.வி.சேகர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ராஜபாளையத்தில் நடந்த மாநில பா.ஜனதா செயற்குழு கூட்டத்திற்கு எனக்கு அழைப்பு இல்லை. அதற்காக நான் ஒதுக்கப்படுவதாக கருதவில்லை.

    இந்த தலைமை என்னை பயன்படுத்திக் கொள்ளவில்லை. என்னை பயன்படுத்திக் கொண்டால் நல்லது. இல்லாவிட்டால் எனக்கு எந்த நஷ்டமும் இல்லை. இதற்காக நான் தமிழிசை வீட்டு வாசலில் போய் நிற்க வேண்டுமா? எல்லோரும் அவரை அக்கா என்று அழைப்பார்கள். என்னை விட அவர் வயது குறைந்தவர். எனவே எனக்கு அவர் தங்கைதான்.

    தமிழக பா.ஜனதாவுக்கு தலைமை ஏற்க வாய்ப்பு கிடைத்தால் அதை நான் ஏற்க தயார். அப்படி ஏற்றால் இப்போது இருப்பதை விட கட்சியை பலமாக்குவேன்.

    தற்போது கட்சி பெற்றுள்ள ஓட்டுக்களை விட அதிக ஓட்டுக்களை வாங்கி காட்ட முடியும். பா.ஜனதா சரியான பாதையில் போகிறது. 2019-ல் நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவார்.


    எச்.ராஜா மீது வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள். தன் மீது தவறு இல்லை என்பதை நிரூபிக்க வேண்டியது அவரது கடமை. கருணாசை கைது செய்ததை எச்.ராஜா வழக்குடன் இணைத்து ஒரே மாதிரி பார்க்க கூடாது.

    நான் சட்டத்தை மதித்து முன்ஜாமீன் வாங்கினேன். நான் தலைமறைவாக இல்லை. கைது செய்யும் அளவுக்கு எந்த தவறும் பா.ஜனதாவினர் செய்யவில்லை. தமிழ்நாட்டில் பா.ஜனதா ஆதரவு இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது. பா.ஜனதாவுடன் அ.தி.மு.க. கூட்டணி வைத்தால் நல்லது. கூட்டணியை தலைமைதான் தீர்மானிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #BJP #SVeShekher
    ×